சிலாபம் கடற்பரப்பில் கடற்றொழில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 41 வயதுடைய கடற்றொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து சம்பவமானது நேற்றைய தினம்(03.07.2026) இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த கடற்றொழிலாளர் சிலாபம் - ரிதீவெல்ல பகுதியைச்…

சிலாபம் கடற்பரப்பில் கடற்றொழில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 41 வயதுடைய கடற்றொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து சம்பவமானது நேற்றைய தினம்(03.07.2026) இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த கடற்றொழிலாளர் சிலாபம் - ரிதீவெல்ல பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார் என்றும், அவரே விபத்துக்குள்ளான படகின் உரிமையாளர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,உயிரிழந்த கடற்றொழிலாளரும் மற்றொரு கடற்றொழிலாளரும் நேற்று முன்தினம்(02.07.2026) மாலை கடற்றொழில்  நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து, நேற்று(03) அதிகாலை அவர்கள் மீண்டும் கரை திரும்பிக் கொண்டிருந்த போதே, கடல் அலையின் சீற்றம் காரணமாக இவர்களது படகு திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.பிரேத பரிசோதனை இதன்போது, படகில் இருந்த இரண்டாவது கடற்றொழிலாளர் அந்தப் பகுதியால் பயணித்த மற்றொரு கடற்றொழில் படகின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். எனினும், கடலில் மூழ்கிய படகின் உரிமையாளரான கடற்றொழிலாளர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், மாரவில கடற்பரப்புக்கு அருகில் வைத்து மற்றுமொரு கடற்றொழில் படகினரால் அவரது சடலம் மீட்கப்பட்டு, சிலாபம் களப்புப் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

பலியானவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காகச் சிலாபம் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சிலாபம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.