சிறை மோதல் தொடர்பான விரிவான விசாரணை : ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் மூவர் கொண்ட குழு நியமனம்! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற…
சிறை மோதல் தொடர்பான விரிவான விசாரணை : ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் மூவர் கொண்ட குழு நியமனம்!
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்காக மூவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ தலைமையிலான இந்த குழுவில் ஓய்வுபெற்ற மேலதிக மன்றாடியார் நாயகம் மிலிந்த குணதிலக மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து முறையான மற்றும் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு, சம்பவத்திற்கான காரணங்கள், அது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக இந்த குழு பணிக்கப்பட்டுள்ளது.

