மேற்கு வங்காள மாநிலம் தெற்கு பர்கானஸ் மாவட்டம் சூர்யபூர் கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி நேற்று முன் தினம் மாலை தனது தோழியின் பிறந்தநாள் விழாவுக்கு பரிசு வாங்க கடைக்கு சென்றுள்ளார். அப்போது, சிறுமியை பின்தொடர்ந்து சென்ற 4 பேர் கொண்ட கும்பல் சிறுமியை கடத்திச்சென்று கூட்டு பாலியல…

மேற்கு வங்காள மாநிலம் தெற்கு பர்கானஸ் மாவட்டம் சூர்யபூர் கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி நேற்று முன் தினம் மாலை தனது தோழியின் பிறந்தநாள் விழாவுக்கு பரிசு வாங்க கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது, சிறுமியை பின்தொடர்ந்து சென்ற 4 பேர் கொண்ட கும்பல் சிறுமியை கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமை பின்னர், சிறுமியை கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி குளத்திற்கு அருகே வீசியுள்ளனர்.

இளைஞர் அடித்துக்கொலை இதனிடையே, கடைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் புகார் அளித்தனர். பின்னர், சிறுமியை பின் தொடர்ந்து சென்ற 4 பேரில் ஒருவனை குடும்பத்தினர் கண்டுபிடித்தனர். அவனிடம் கேட்டபோது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளான்.இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர், அந்த இளைஞரை அடித்துக்கொன்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சாலையில் டயர்களை தீ வைத்து எரித்து, எஞ்சிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தலைமறைவாக உள்ள எஞ்சிய குற்றவாளிகளை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.