சிறுபோக பயிர்ச்செய்கைக்கான உரமானியம் தற்போதைக்கு 90 சதவீத விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 2026 சிறுபோக பயிர்ச்செய்கைப் பருவத்திற்கான உர மானியம் நெல் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள விவசாயிகளுக்கும் உரிய மானியங்கள் விரைவில் வழ…

சிறுபோக பயிர்ச்செய்கைக்கான உரமானியம் தற்போதைக்கு 90 சதவீத விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

2026 சிறுபோக பயிர்ச்செய்கைப் பருவத்திற்கான உர மானியம் நெல் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள விவசாயிகளுக்கும் உரிய மானியங்கள் விரைவில் வழங்கப்படும் என்றும் கமத்தொழில் அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் இதுவரை காலமும் வழங்கப்படும் உர மானியம் 5,000 ரூபாவினால் அண்மையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.உரமானியம்

அதன் பிரகாரம் தற்போதைக்கு ஒரு ஹெக்டயாருக்கு 30,000 ரூபா வரை உர மானியமாக வழங்கப்படுவதாகவும் கமத்தொழில் அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே பல்வேறு பிரதேச விவசாயிகள் தங்களுக்கான உரமானியம் உரிய முறையில் வழங்கப்படவில்லை என்று அண்மைக்காலமாக ஊடகங்கள் வாயிலாக முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.