சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலையில் அண்மையில் ஏற்பட்ட கோர வெடிவிபத்தில், தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழ்ப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இலங்கையின் களுத்துறை மாவட்டம், கீக்கியன கந்தையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், ராசமாணிக்கம் (என்கிற 'ராசம்', வயது 65) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர…
சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலையில் அண்மையில் ஏற்பட்ட கோர வெடிவிபத்தில், தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழ்ப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இலங்கையின் களுத்துறை மாவட்டம், கீக்கியன கந்தையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், ராசமாணிக்கம் (என்கிற 'ராசம்', வயது 65) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், செல்லையா மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரின் சகோதரி ஆவார்.
தமிழகத்தின் சில பகுதிகளில் வசித்து வரும், தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்க்கை இன்றும் சொல்லொணாத் துயரங்கள் நிறைந்ததாகவே காணப்படுகிறது. குறிப்பாக, வறுமையின் காரணமாகச் சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலைகளில் நம் மக்கள் அதிக அளவில் கூலிவேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அன்றாடப் பிழைப்பிற்காகத் தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் இவர்கள், அடிக்கடி இத்தகைய விபத்துகளில் சிக்கித் தங்கள் இன்னுயிரை இழக்கும் அவலம் தொடர்ந்து நீடிக்கிறது. நிம்மதி தேடித் தாய்மண் வந்தவர்களின் வாழ்வில், இந்தத் துயரச் சம்பவங்கள் என்றுதான் முற்றுப்பெறுமோ?

