கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வித்தானகே மாவத்தை பகுதியில், வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 728 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 81 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத்…

கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வித்தானகே மாவத்தை பகுதியில், வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 728 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 81 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று (30) விசேட சோதனையொன்று நடத்தப்பட்டது.

இதன்போது, கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த, அந்த வீட்டின் உரிமையாளரான 81 வயதுடைய பெண்ணே போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும், பொலிஸார் இந்த சோதனையை மேற்கொண்ட வேளையில், குறித்த பெண்ணின் மகன் வீட்டிலிருந்து தப்பியோடியுள்ளார். தலைமறைவாகியுள்ள அந்த சந்தேக நபரைக் கைது செய்வதற்காக கொம்பனித்தெரு பொலிஸார் தீவிர மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.