கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவின் உடல்நிலை குறித்து மருத்துவ பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது ஏற்பட…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவின் உடல்நிலை குறித்து மருத்துவ பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது ஏற்பட்ட இதய நோய் காரணமாக, சுரேஷ் சலே திடீரென இதய நோய் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். உடல்நிலை குறித்து மருத்துவ பரிசோதனைகள்

இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து மருத்துவப் பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. தொடர்புடைய அனைத்துப் பரிசோதனைகளும் முடிக்கப்பட்டு, அடுத்த சில நாட்களில் சுகாதார அமைச்சகத்தின் செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தால் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தபோது ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, சுரேஷ் சலே ஜூன் 7ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.மருத்துவர்கள் நடவடிக்கை

அங்கு சிகிச்சை பெற்று வந்தபோது, ​​27ஆம் திகதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, சுரேஷ் சலேவை உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் பிரிவிற்கு மாற்றுவதற்கு மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.