அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவிற்கு எதிரான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளரிடமிருந்து நீக்க முடியாதென நீதிமன்றம் அறிவித்துள்ளது.சுரேஷ் சலே தொடர்பான வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(01) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே…

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவிற்கு எதிரான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளரிடமிருந்து நீக்க முடியாதென நீதிமன்றம் அறிவித்துள்ளது.சுரேஷ் சலே தொடர்பான வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(01) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்போது 23 பக்கங்கள் கொண்ட உத்தரவை அறிவித்த கோட்டை பிரதம நீதவான் பசன் அமரசேன, சுரேஷ் சலே எழுதுவதற்காக எழுதுகருவிகள் மற்றும் ஆவணங்களை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையையும் நிராகரித்துள்ளார்.

மேலும், இரகசிய வாக்குமூலத்திற்காக சலே, முன்வைத்த கோரிக்கையையும் நீதவான் நிராகரித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, உணவு தவிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்திய கண்காணிப்பின் கீழ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.இந்நிலையில் தனது சட்டத்தரணிகளின் ஆலோசனையின் பேரில் இன்று முதல் உண்ணாவிரதத்தைக் கைவிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.