ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். ஜோதிடத்தில் சூரியனுக்கும், சனிக்கும் இடையே பகையுணர்வு உள்ளது. இதனால் இந்த சூரிய பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றத்தையும…
ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். ஜோதிடத்தில் சூரியனுக்கும், சனிக்கும் இடையே பகையுணர்வு உள்ளது. இதனால் இந்த சூரிய பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றத்தையும், நிதி நிலையில் வளர்ச்சியையும் காணவுள்ளனர். இப்போது ஜூலை 20 ஆம் திகதி நடக்கும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.மேஷம் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கை செழிப்பாக மாறும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் அல்லது பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் பெரிய அளவில் லாபத்தைக் காண்பார்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் உருவாகும். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். குறிப்பாக தந்தையின் ஆதரவால் முக்கியமான வேலையை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.மிதுனம் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி நன்மைகளைத் தரும். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும். மேலும் ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்தும் நல்ல லாபம் கிடைக்கும்.சிம்மம் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது சிம்ம ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையையும், மன வலிமையையும் அதிகரிக்கும். பணியிடத்தில் நற்பெயர் அதிகரிக்கும். மேலும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக தொந்தரவு செய்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். மிகுந்த ஆற்றலுடன் செயல்படுவீர்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலையில் எதிர்பாராத உயர்வு ஏற்படும்.விருச்சிகம் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வேகமாகவும், வெற்றிகரமாகவும் முடிவடையும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால் இக்காலத்தில் முயற்சித்தால் நல்ல வேலையை பெறலாம்.

