சூரியபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜனசவிவெவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 45 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வான்எல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணைகளின்படி, அவர் மற்றொருவருடன் வயல்வெளிக்குச் சென்றிருந்தபோது திடீர…
சூரியபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜனசவிவெவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 45 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வான்எல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, அவர் மற்றொருவருடன் வயல்வெளிக்குச் சென்றிருந்தபோது திடீரென காட்டு யானை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

