இலங்கை துறைமுக அதிகாரசபை டெண்டரை பெறுவதற்காக, பெருந்தொகையான பணம் மோசடி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு பொருட்களை வழங்குவதற்கான இரண்டு ஒப்பந்தப்புள்ளிகளைப் பெறுவதற்காக, ஏறக்குறைய 33 லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்யப்பட்டுள்…

இலங்கை துறைமுக அதிகாரசபை டெண்டரை பெறுவதற்காக, பெருந்தொகையான பணம் மோசடி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு பொருட்களை வழங்குவதற்கான இரண்டு ஒப்பந்தப்புள்ளிகளைப் பெறுவதற்காக, ஏறக்குறைய 33 லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் தெரியவந்துள்ளது. நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு இது தொடர்பில் தற்போதைக்கு குற்றப் புலனாய்வுப் பணியகம், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது. இதனையடுத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பணியகம் ஆரம்பித்துள்ளது.