தவெக ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க, ஆளும் த.வெ.க கட்சியின் உத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ டாக்டர் என். இளையராஜாவுக்கு ரூ.35 கோடி பேரம் பேசி, மிரட்டல் விடுத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில், சென்னை காவல்துறை அதிரடி நடவடிக்கை எட…
தவெக ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க, ஆளும் த.வெ.க கட்சியின் உத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ டாக்டர் என். இளையராஜாவுக்கு ரூ.35 கோடி பேரம் பேசி, மிரட்டல் விடுத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில், சென்னை காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.சதியின் பின்னணியில் முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, நரேஷ் மற்றும் தியாகராஜன் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், இந்த குதிரை பேர சதியின் பின்னணியில் முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வி. அசோக் குமார் ஆகியோர் இருந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் சென்னை திருவல்லிக்கேணி போலிசார் அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரசியல் உத்தி வகுப்பாளர் எனக்கூறி இளையராஜாவைத் தொடர்புகொண்ட கும்பல், ஆட்சிக்கு எதிராக வாக்களிக்குமாறு பேரம் பேசியதும், அதற்கு அவர் மறுத்ததால் கொலை மிரட்டல் விடுத்ததும் அம்பலமாகியுள்ளது.
தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் த.வெ.க அரசை நிலைகுலைய வைக்க திமுகவினர் முயல்வதாக ஆளுங்கட்சி குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

