த.வெ.க. நடத்தும் தோழமை கட்சிகளுக்கான நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்க மார்க்சிஸ்ட் கொம்யூனிஸ்ட், இந்திய கொம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்ற த.வெ.க தனிப்…
த.வெ.க. நடத்தும் தோழமை கட்சிகளுக்கான நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்க மார்க்சிஸ்ட் கொம்யூனிஸ்ட், இந்திய கொம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்ற த.வெ.க தனிப் பெரும்பான்மைப்புக்குத் தேவையான 118 தொகுதிகள் இல்லாததால் மற்ற கட்சிகளின் ஆதரவை நாடியது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ், வி.சி.க, இடதுசாரிகள் மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் த.வெ.க அரசு ஆட்சி அமைத்தது.
இதையடுத்து, தோழமைக் கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் த.வெ.க சார்பில் நடத்தப்படவுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் முதல்வர் விஜய் தலைமையில் இன்று இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், கூட்டத்தில் பங்கேற்க மார்க்சிஸ்ட் கொம்யூனிஸ்ட் மாநில செயலர் பெ. சண்முகம், இந்திய கொம்யூனிஸ்ட் மாநில செயலர் மு. வீரபாண்டியன் ஆகியோரை அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்து நேற்று அழைப்பு விடுத்தனர். (a)

