மாலம்பே நகரில் இலவச சாத தானசாலையில் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் பதின்ம வயதுடைய 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில்,உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் பொசன் பௌர்ணமி தினத்தில் ம…

மாலம்பே நகரில் இலவச சாத தானசாலையில் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் பதின்ம வயதுடைய 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில்,உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்

பொசன் பௌர்ணமி தினத்தில் மாலம்பே நகரில் நடைபெற்ற தானசாலை ஒன்றின் அருகில், இளைஞர் ஒருவரை சிலர் பாதுகாப்புத் தலைக்கவசங்களாலும் கைகளாலும் கால்களாலும் தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பாக 2026.06.30 அன்று மாலபே பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபர்களைத் தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அதன்படி, அதே நாளில் (30), தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 16 மற்றும் 17 வயதுடைய, பட்டியவத்த வீதி, கொத்தலாவல பகுதியைச் சேர்ந்த 5 சந்தேகநபர்கள் மாலபே பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

மாலபே நகரில் நடைபெற்ற இலவச சாத தானசாலையில் இளைஞர் ஒருவர் வரிசையில் காத்திருந்தபோது, வரிசைக்கு வெளியே இருந்து வந்த இருவர் அவருக்கு முன்னால் வரிசையில் சேர முயன்றுள்ளனர்.

அப்போது, அந்த இளைஞர் அவர்கள் வரிசையின் பின்புறத்தில் சேருமாறு அறிவுறுத்தியதே தாக்குதலுக்கு காரணமாக இருந்ததாக பொலிஸார் குரிப்பிட்டுள்ளனர்.