போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளர் மட்டக்களப்பு - தாந்தாமலை ஸ்ரீ முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து அரசியலுக்காக பொய்யான மற்றும் பிழையான கருத்துக்கள் வழங்கி தமிழர்களின் வரலாற்றை சீர்குலைத்து வருகின்றனர் என கொக்கட்டிச்சோலை பிரதேச சபை தவிசாளர் கிரேஸ்குமார் கடும்…
போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளர் மட்டக்களப்பு - தாந்தாமலை ஸ்ரீ முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து அரசியலுக்காக பொய்யான மற்றும் பிழையான கருத்துக்கள் வழங்கி தமிழர்களின் வரலாற்றை சீர்குலைத்து வருகின்றனர் என கொக்கட்டிச்சோலை பிரதேச சபை தவிசாளர் கிரேஸ்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.கொக்கட்டிச்சோலை பிரதேச சபை தவிசாளர் நேற்று(30.06.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.பொய்யானது கருத்துக்கள் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு - தாந்தாமலை ஸ்ரீ முருகன் கோவிலின் வரலாறு, அதனுடைய கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்கள் தொடர்பாக பிரதேசத்தில் இருக்கும் ஒரு சில தமிழரசு கட்சி செயற்பாட்டாளர்கள் பொய்யான கருத்துக்களை கூறியுள்ளனர்.
அவர்களுடைய கருத்துக்கள் பொய்யானதும் திரிவுபடுத்தப்பட்ட கருத்துக்களாகவும் அமைந்துள்ளன. இந்த பிரதேசம் தொல்லியல் பிரதேசமாக பிரகடணப்படுத்தப்பட்டிருக்கும் இந்த வேளையில் அந்த ஆலயத்தில் தீ பற்றி எரிந்ததில் அங்குள்ள மின்சார பெட்டி பாதிக்கப்பட்டிருந்தது.பின்பு இரா.சாணக்கியனின் அறிவுறுத்தலின் படி மீண்டும் பெட்டி பூட்டப்பட்டப்பட்டது. ஆனால் அந்த மின்சாரப் பெட்டி புதுப்பிக்கப்படவில்லை.
அதேவேளை குறித்த ஆலயம் 300 வருடம் பழமை வாய்ந்ததாக போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர் மதிமேனன் குறிப்பிட்டிருந்தார். ஆனால் உண்மையில் இந்த ஆலயம் மூவாயிரத்து எழுநூறு வருடங்கள் வரலாற்றை கொண்டது.தமிழர்களுடைய வரலாற்றை சீர்குலைக்கும் செயல்ஆகவே உங்களுடைய இந்த செயற்பாடுபிரதேசத்தின் வளர்ச்சியும் எமது கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது.
உண்மையாகவே இந்த ஆலயம் மற்றும் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பணிசெய்ய வேண்டுமாக இருந்தால் ஆலயத்தின் நிருவாக சபையினரை அழைத்து அவர்களுடன் கலந்தாலோசித்து அதற்கான ஒரு திட்டவரைபடத்தை அந்த உயர் ஸ்தாணிகரிடம் கையளித்திருக்க வேண்டும்.
ஆனால் எந்த விதமான ஒரு திட்டமிடல்களும் இல்லாது அரசியலுக்காக அந்த இடத்தை பயன்படுத்தி இருந்தார்கள்.
எங்களுடைய பிரதேசத்தில் வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து எமது தமிழர்களுடைய பூர்வீக இடங்களையும் வரலாறுகளையும் திரிவுபடுத்தி ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் உட்பட்டது தான் என ஒரு கருத்தை முன்வைத்து தமிழர்களுடைய வரலாற்றை தமிழரசு கட்சி சீரழிக்கும் செயலாக நான் இதை பார்க்கிறேன் என சாடியுள்ளார்.

