வீரகெட்டிய பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், அம்பாந்தோட்டை மாவட்ட இளைஞர் முன்னணியின் ஊடகச் செயலாளரும் 30 வயதுடைய இளைஞர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஹகுருவெல பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளன…

வீரகெட்டிய பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், அம்பாந்தோட்டை மாவட்ட இளைஞர் முன்னணியின் ஊடகச் செயலாளரும் 30 வயதுடைய இளைஞர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஹகுருவெல பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். நேற்று சனிக்கிழமை (27) நடைபெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதிலேயே இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாக்குவாதம் தீவிரமடைந்ததில், சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் குறித்த நபரைத் தாக்கியுள்ளார். இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் மெதமுலன பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலின் போது சந்தேகநபரின் தாயாரும் காயமடைந்து, சிகிச்சைக்காக வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிஸார் ஈடுட்டு வருகின்றனர்.