திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வநகர் பகுதியில், வீடோடு இணைந்த தேனீர் கடையொன்றின் மேல் தளத்திலிருந்து விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (01) அதிகாலை இடம்பெற்றுள்ளது.மேலதிக விசாரணை உயிரிழந்தவர் தோப்பூர் – பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த…

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வநகர் பகுதியில், வீடோடு இணைந்த தேனீர் கடையொன்றின் மேல் தளத்திலிருந்து விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (01) அதிகாலை இடம்பெற்றுள்ளது.மேலதிக விசாரணை

உயிரிழந்தவர் தோப்பூர் – பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய, நான்கு பிள்ளைகளின் தந்தையான சாதீக் றிஸ்வி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை. அவர் தூக்கக் கலக்கத்தில் தவறி விழுந்தாரா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதி மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சென்று சடலத்தை பார்வையிட்டுள்ளனர். பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸ் முன்னெடுத்து வருகின்றனர்.