மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் பிரதான பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் இன்று (28) மாலை இடிந்து வீழ்ந்ததால், அப்பகுதியூடான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைஇன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்த நிலையில், இச்சம்பவத்தில் உயிரிழப்போ…

மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் பிரதான பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் இன்று (28) மாலை இடிந்து வீழ்ந்ததால், அப்பகுதியூடான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைஇன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்த நிலையில், இச்சம்பவத்தில் உயிரிழப்போ அல்லது காயமோ எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இப்பாலம் கடந்த ஆட்சிக்காலத்தில் புனரமைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.எனினும், இன்று மாலை ஏற்பட்ட இடிவீழ்ச்சி அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்பாலத்தை தினசரி பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு நகருக்குள் நுழைய இரண்டு பிரதான பாலங்கள் மட்டுமே உள்ள நிலையில், அவற்றில் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளதால் தற்போது ஒரே ஒரு பாலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் எதிர்வரும் நாட்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கக்கூடும் என பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.