கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் விசேட திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 32 மோட்டார் சைக்கிள் உட்பட 1 முச்சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சோதனை நடவடிக்கையானது கடந்த வெள்ளிக்கிழமை (28) இரவு முதல் இன்று (29) வரை நடைபெற்றது.சோதனை நடவடிக்கைகுறிப்பாக இச்சோதனை நடவடிக்கைய…
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் விசேட திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 32 மோட்டார் சைக்கிள் உட்பட 1 முச்சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.
இச்சோதனை நடவடிக்கையானது கடந்த வெள்ளிக்கிழமை (28) இரவு முதல் இன்று (29) வரை நடைபெற்றது.சோதனை நடவடிக்கைகுறிப்பாக இச்சோதனை நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிள்கள் கட்டங் கட்டமாக பொலிஸாரினால் இடைமறிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டன.அத்துடன் வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் பொலிஸாரினால் வழங்கப்பட்டன.
அத்துடன் மோட்டார் சைக்கிள் ஆவணம் காப்புறுதி எதுவும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்துவது, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது , ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டன.
மேலும் இவ் விசேட சோதனை நடவடிக்கையில் 75 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும் ஆபத்து விளைவிக்கும் நோக்குடன் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிமீறல் மற்றும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 117 போக்குவரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதே வேளை பொதுப்போக்குவரத்து சட்டங்களை மீறும் நபர்கள் சட்ட விரோத கடத்தல்களுக்கு துணை நிற்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

