"தர்பூசணிச் செய்கை" நவீன பயிரிடல் முயற்சியின் முதலாவது அறுவடை.. கிளிநொச்சி மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கம், நவீன விவசாய முறையில் பயிரிடலை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது. அலுவலகச் சூழலை பசுமையாக மாற்றுவதும், ஊழியர்களுக்கு மனநலன் மற்றும் பணித்திறனை அதிகரிக்கும் சூழலை உர…

"தர்பூசணிச் செய்கை" நவீன பயிரிடல் முயற்சியின் முதலாவது அறுவடை..

கிளிநொச்சி மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கம், நவீன விவசாய முறையில் பயிரிடலை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது. அலுவலகச் சூழலை பசுமையாக மாற்றுவதும், ஊழியர்களுக்கு மனநலன் மற்றும் பணித்திறனை அதிகரிக்கும் சூழலை உருவாக்குவதும் இலக்காகக் கொண்டு, ஊழியர் நலன்புரிச் சங்கம் பல்வேறு விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. ஆரம்ப முயற்சிகளின் வெற்றிகளை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட தர்பூசணிச் செய்கையின் முதலாவது அறுவடை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. இவ் அறுவடைச் செயற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஊழியர் நலன்புரிச் சங்கத்தினர் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து பங்கேற்றனர்.2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நவீன விவசாய முறையில் பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தர்பூசணிச் செய்கை தற்போது சிறந்த விளைச்சலை வழங்கியுள்ளது.பல்வகைப் பயிரிடல் மூலம் விளைச்சல் நிலைத்தன்மையை அதிகரிப்பதும், நவீன விவசாய முறைகளை ஊக்குவிப்பதும் இந்த முயற்சியின் பிரதான நோக்கமாகும். கிளிநொச்சி மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் இந்த முயற்சியை நவீன விவசாயத்தைக் கற்றுக்கொள்ள விரும்பும் விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், பசுமை வீட்டு விவசாயத்தை முயற்சிக்க விரும்பும் இளைஞர்கள் நேரில் வருகை தந்து பார்வையிடலாம். பார்வை நேரம்:வார நாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை. இடம்:கிளிநொச்சி மாவட்டச் செயலக அலுவலகத் தோட்டம்.இந்த முயற்சி மாவட்ட விவசாயிகளின் திறன் மேம்பாட்டிற்கும், நவீன விவசாய முறைகளின் பரவலுக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.