இந்த ஆண்டின் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான ஐந்து மாதங்களில், இலங்கையின் தேங்கு மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 514 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுக…
இந்த ஆண்டின் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான ஐந்து மாதங்களில், இலங்கையின் தேங்கு மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 514 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இது 21 சதவீத வளர்ச்சியாகும் என்று அந்த அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலையால் கப்பல் போக்குவரத்து பாதைகள் பாதிக்கப்பட்டது, கப்பல் கட்டணங்கள் மற்றும் காப்புறுதி செலவுகள் அதிகரித்தது, எரிபொருள் விலை உயர்ந்தது போன்ற பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும் இந்த வளர்ச்சி பதிவாகியுள்ளது.
தேங்காய் விளைச்சல் அதிகரித்ததுடன், சர்வதேச சந்தையில் தேங்காய் மற்றும் அதன் உற்பத்திப் பொருட்களுக்கு ஏற்பட்ட அதிகரித்த தேவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், போர் சூழ்நிலையின் தாக்கத்தால் செவ்விளநீர் ஏற்றுமதி சுமார் 33 சதவீதம் வரை குறைந்துள்ளது. இலங்கையின் செவ்விளநீர் ஏற்றுமதியில் சுமார் 95 சதவீதம் டுபாய் சந்தையைச் சார்ந்திருப்பதால், அங்குள்ள நிலைமைகள் இந்த வீழ்ச்சிக்கு காரணமாகியுள்ளன.
அதேவேளை, தேங்காய் பருப்பு சார்ந்த பொருட்கள், தேங்காய் நார் உற்பத்திகள், சிரட்டை சார்ந்த தயாரிப்புகள் உள்ளிட்ட பிற தேங்காய் சார்ந்த ஏற்றுமதித் துறைகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்து, மொத்த ஏற்றுமதி வருமான உயர்வுக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

