தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் 70 கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக ,இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் பஸ் உரிமையாளர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 2015ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை வீதி அனுமதிப்பத்திரங்களை (Route Permits) வழங்கும் போதே…
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் 70 கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக ,இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் பஸ் உரிமையாளர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 2015ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை வீதி அனுமதிப்பத்திரங்களை (Route Permits) வழங்கும் போதே இந்த நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வீதி அனுமதிப்பத்திரங்களில் நடைபெற்ற மோசடிஅமைச்சரவை அனுமதியோ, சட்டபூர்வமான நடைமுறையோ அல்லது டெண்டர் (Tender) செயல்முறையோ இன்றி 42 வீதி அனுமதிப்பத்திரங்களை (Route Permits) வழங்கியதன் மூலம் இந்த நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இதற்கு மேலதிகமாக, அரசியல்வாதிகளின் தேவைக்கேற்ப அரசியல் தேவைகளுக்காக ஒரு கோடி ரூபாவிற்கு அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

