ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனிஅவர்களின் மறைவையொட்டி, தெஹ்ரானில் நடைபெற்றுவரும் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி ஆகியோர் ஈரான் சென்றுள்ளனர். ஈரான் உச்ச தல…

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனிஅவர்களின் மறைவையொட்டி, தெஹ்ரானில் நடைபெற்றுவரும் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்வதற்காக   ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி ஆகியோர் ஈரான் சென்றுள்ளனர்.

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் ஜனாஸாவுக்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த அதிதிகள் நினைவுக் குறிப்பேட்டில் (Condolence Book) இலங்கைத் தூதுக்குழுவினர் தமது அனுதாபங்களைப் பதிவு செய்து கையொப்பமிட்டனர். அதனைத் தொடர்ந்து, ஈரான் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் அவர்கள் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வின்போது, ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் எம்.ஐ. பஸீஹா அஸ்மி மற்றும் தூதரக அதிகாரிகள், வருகை தந்திருந்த இலங்கைத் தூதுக்குழுவினரைச் சந்தித்து கலந்துரையாடினர்.