தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை நிர்வகிப்பது தொடர்பில் ஆராயப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். குறித்த வைத்தியசாலைக்கு நேற்று(27.06.2026) விஜயம் செய்த அமைச்சர் அங்குள்ள வைத்தியசாலை நிர்வாகத்தினர் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர்களுடன் கலந்துரையாடி…

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை நிர்வகிப்பது தொடர்பில் ஆராயப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். குறித்த வைத்தியசாலைக்கு நேற்று(27.06.2026) விஜயம் செய்த அமைச்சர் அங்குள்ள வைத்தியசாலை நிர்வாகத்தினர் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.அமைச்சரின் வாக்குறுதிஅத்துடன், எதிர்வரும் காலத்தில் வைத்தியசாலையில் உள்ள 3 மாடி கட்டிடத்தை முழுமையாக கட்டித்தருவதாகவும் அமைச்சர் வாக்குறுதியளித்துள்ளார்.

இதன்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் சிறீபவானந்தராஜா, சுகாதார அமைச்சின் செயலாளர் அணில் ஜெயசிங்க உள்ளிட்ட சுகாதார துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். மேலதிக தகவல் -  ராகேஷ்வைத்தியசாலை வளாகத்துக்கு வருகை தந்த அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் தற்போதைய நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் பிராந்தியத்தின் மிக முக்கிய பிரிவான புற்றுநோய் வைத்தியசாலையின் தற்போதைய நிலைமைகள் குறித்து நேரில் ஆராய்ந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வைத்தியசாலை நிர்வாகத்தினர், விசேட புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஏனைய மருத்துவர்களுடன் அத்தியாவசியத் தேவைகள், மருந்துப் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அமைச்சர் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சர், "தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்த்து, வடக்கு மாகாண மக்களுக்குச் சிறந்த மருத்துவச் சேவையை வழங்கும் நோக்கில் அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், வைத்தியசாலை வளாகத்தில் தற்போது பாதியிலேயே கட்டுமானப் பணிகள் தடைப்பட்டுப் போயுள்ள மூன்று மாடிக் கட்டடத்தின் எஞ்சிய பணிகள் அனைத்தும், எதிர்வரும் காலப்பகுதியில் அமைச்சின் விசேட நிதியொதுக்கீட்டின் கீழ் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கையளிக்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது வாக்குறுதியளித்துள்ளார்.