இந்த ஆண்டு இதுவரை தென்னை ஏற்றுமதியின் மூலம் 514 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. தென்னை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறையில் பதிவாகியுள்ள வளர்ச்சியின் காரணமாக, நாட்டின் ஏற்றுமதி வருவாயில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற…
இந்த ஆண்டு இதுவரை தென்னை ஏற்றுமதியின் மூலம் 514 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தென்னை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறையில் பதிவாகியுள்ள வளர்ச்சியின் காரணமாக, நாட்டின் ஏற்றுமதி வருவாயில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவிக்கையில், தென்னை அறுவடை அதிகரித்துள்ளதுடன், சர்வதேச சந்தையில் தென்னை மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திப் பொருட்களுக்கான தேவை அதிகரித்திருப்பதே இந்த வருவாய் உயர்வுக்கான முக்கிய காரணங்களாகும் என்றார்.
எதிர்காலத்தில் தென்னை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை மேலும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

