கொழும்பில் மட்டக்குளி ஃபெர்குசன் வீதியில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையின் போது, ஐந்து கிலோகிராமிற்கும் அதிக எடையுள்ள ஹெரோயினுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலதிக விசாரணைகிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவ…
கொழும்பில் மட்டக்குளி ஃபெர்குசன் வீதியில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையின் போது, ஐந்து கிலோகிராமிற்கும் அதிக எடையுள்ள ஹெரோயினுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலதிக விசாரணைகிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக, நேற்று (01) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே 40 வயதுடைய இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 5 கிலோகிராம் 140 கிராம் ஹெரோயின், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 50,000 ரூபாய் பணம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு கைபேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொழும்பு - 10 பகுதியைச் சேர்ந்த இந்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்குளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

