கம்பஹா கடவத்தை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட இஹல பியன்வில பகுதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற கூரிய ஆயுதத் தாக்குதலில் 54 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.மேலதிக விசாரணை உயிரிழந்தவர் கடவத்தை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவ…
கம்பஹா கடவத்தை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட இஹல பியன்வில பகுதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற கூரிய ஆயுதத் தாக்குதலில் 54 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.மேலதிக விசாரணை
உயிரிழந்தவர் கடவத்தை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.சம்பவத்தில் காயமடைந்த இருவர் உடனடியாக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, உயிரிழந்தவர் தனது சகோதரரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டிருந்தபோது அங்கு வந்த மேலும் இருவருடன் ஏற்பட்ட வாய்த்தகராறு வன்முறையாக மாறி, கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தப்பிச் சென்றுள்ள மற்றைய சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கடவத்தை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

