வனாத்தவில்லுவில் நீரில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர். வனாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரநாயகபுர, மங்களபுர வில்லுப் பகுதியிலேயே இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் செவ்வாய்க்கிழமை (30) அன்று பகல் இடம்பெற்றுள்ளது. சுற்றுலா சென்ற ஐந்து பாடசாலை மாணவர்கள், அங்க…

வனாத்தவில்லுவில் நீரில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

வனாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரநாயகபுர, மங்களபுர வில்லுப் பகுதியிலேயே இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் செவ்வாய்க்கிழமை (30) அன்று பகல் இடம்பெற்றுள்ளது.

சுற்றுலா சென்ற ஐந்து பாடசாலை மாணவர்கள், அங்குள்ள வில்லுப் பகுதியில் தெப்பம் ஒன்றில் ஏறிச் சென்றபோது, அந்தத் தெப்பம் கவிழ்ந்ததில் அவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.

இதில் ஒரு மாணவன் நீந்தி கரைக்கு வந்து உயிர் தப்பியுள்ளார். ஏனைய நான்கு மாணவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காகப் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் 16 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் பண்டாரநாயகபுர மற்றும் மங்களபுர பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.