பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் அசாதாரண மாற்றங்கள் காரணமாக, அடுத்த சில மாதங்களில் மிகவும் சக்திவாய்ந்த 'எல் நினோ' வானிலை நிகழ்வு அதிவேகமாக உருவாகக்கூடும் என்று ஐ.நாவின் உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது. இது உலகளாவிய வெப்பநிலையை மேலும் அதிகரிக்கச் செய்து, கடுமையான வானிலை மா…
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் அசாதாரண மாற்றங்கள் காரணமாக, அடுத்த சில மாதங்களில் மிகவும் சக்திவாய்ந்த 'எல் நினோ' வானிலை நிகழ்வு அதிவேகமாக உருவாகக்கூடும் என்று ஐ.நாவின் உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.
இது உலகளாவிய வெப்பநிலையை மேலும் அதிகரிக்கச் செய்து, கடுமையான வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட அதிகமாக வெப்பமடையும் நிகழ்வே 'எல் நினோ' எனப்படுகிறது.புதிய உச்சங்களுக்கு வெப்பநிலை செல்லும் சாத்தியம் பொதுவாக ஒன்பது முதல் பன்னிரண்டு மாதங்கள் வரை நீடிக்கும் இந்த இயற்கை சுழற்சி, உலக வெப்பநிலையை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்லக்கூடும் என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பசிபிக் பகுதியில் எல் நினோவிற்கான சூழல் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், அது மிகவும் வலுவானதாக மாறும் என கணிப்பு மாதிரிகள் தெளிவாகக் காட்டுவதாகவும் உலக வானிலை அமைப்பின் விஞ்ஞானி அல்வாரோ சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த வானிலை மாற்றத்தால் மத்திய அமெரிக்கா, கரீபியன் நாடுகள், வட மற்றும் தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட வறண்ட சூழல் நிலவக்கூடும்.
ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை, பருவமழைக்காலத்தில் தெற்காசியா, இந்தோனேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் மழைப்பொழிவு பெருமளவில் குறைய வாய்ப்புள்ளது.மிகக் கடுமையான வெப்ப அலை இது விவசாயத்தையும் நீர் ஆதாரங்களையும் பாதிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. நீடிக்கும் சவால்கள் சமீபத்தில் ஐரோப்பிய நாடுகள் தங்களது வரலாற்றிலேயே மிகக் கடுமையான வெப்ப அலையைச் சந்தித்துள்ளன.
பருவநிலை மாற்றத்தால் ஏற்கனவே புவி வெப்பமடைந்து வரும் வேளையில், இந்த எல் நினோ நிகழ்வு உலக வெப்பநிலைக்கு மேலும் ஒரு கூடுதல் உந்துதலைக் கொடுக்கும் என்று வானிலை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த கடுமையான வானிலை மாற்றங்களின் தாக்கம் இந்த ஆண்டின் இறுதி வரை மட்டுமின்றி, எதிர்வரும் 2027ஆம் ஆண்டு வரையிலும் நீடிக்கக்கூடும் என்பதால் உலக நாடுகள் தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

