நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை ஏற்பட்ட அமைதியின்மை மேலும் தீவிரமடைந்து வருவதால் கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்றுவதற்கு சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது கைதிகள் பலர் முன்வாசல் வழியாக சிறையை விட்டு வெளியேற முயன்றதால் இந்த அவ…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை ஏற்பட்ட அமைதியின்மை மேலும் தீவிரமடைந்து வருவதால் கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்றுவதற்கு சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது கைதிகள் பலர் முன்வாசல் வழியாக சிறையை விட்டு வெளியேற முயன்றதால் இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைஎனவே கைதிகளை தும்பர உள்ளிட்ட சிறைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை சிறை நிர்வாகம் எடுத்துள்ளது. இன்று காலை சிறையில் வெடித்த கலவரத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல் சூழ்நிலையைக் கட்டுப்படுத்தவும், கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டு வருவதாக ஒரு மூத்த சிறை அதிகாரி கூறியுள்ளார்.
சம்பவ இடத்தில் நிலைமை தீவிரமடைந்து வருவதால் கட்டுப்படுத்த பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை, இலங்கை இராணுவம், விமானப்படை மற்றும் பிற பாதுகாப்புப் படைகளை வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

