பல்கலைக்கழகங்களில் டெங்கு நோயாளர்கள் கொத்தணிகளாக (Cluster) அடையாளம் காணப்பட்டால், சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய அவற்றை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். தேசிய மட்டத்தில் டெங்கு பரவல் ந…
பல்கலைக்கழகங்களில் டெங்கு நோயாளர்கள் கொத்தணிகளாக (Cluster) அடையாளம் காணப்பட்டால், சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய அவற்றை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
தேசிய மட்டத்தில் டெங்கு பரவல் நிலவி வருவதால், கல்வி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு நோயாளர்கள் குழுவாகப் பதிவானால், சுகாதாரப் பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெங்கு நோயாளர்கள் பதிவானதையடுத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ள கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம், சுகாதாரப் பிரிவினரின் பரிந்துரைகளுக்கு அமைய எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், டெங்கு பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

