அமெரிக்காவில் திருநங்கை விளையாட்டு வீரர்கள், பெண்களுக்கான விளையாட்டு அணிகளில் பங்கேற்பதற்குத் தடை விதிக்கும் மாநிலச் சட்டங்களை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் வெஸ்ட் வெர்ஜீனியா மற்றும் இடாஹோ ஆகிய மாநிலங்கள் விதித்திருந்த தடைகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக…
அமெரிக்காவில் திருநங்கை விளையாட்டு வீரர்கள், பெண்களுக்கான விளையாட்டு அணிகளில் பங்கேற்பதற்குத் தடை விதிக்கும் மாநிலச் சட்டங்களை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இதன் மூலம் வெஸ்ட் வெர்ஜீனியா மற்றும் இடாஹோ ஆகிய மாநிலங்கள் விதித்திருந்த தடைகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து, இத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.திருநங்கைகள் இந்த விவகாரம் அமெரிக்காவில் தற்போதைய கலாச்சார மற்றும் அரசியல் ரீதியான விவாதங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பொதுப் பாடசாலைகளில் உள்ள விளையாட்டு அணிகளை "உயிரியல் பாலினத்தின்" (Biological sex) அடிப்படையில் பிரிக்க வேண்டும் என்றும், பெண்களுக்கான அணிகளில் மாற்றுப் பாலினத்தவர் பங்கேற்கத் தடை விதிக்கலாம் என்றும் இந்த மாநிலச் சட்டங்கள் கூறுகின்றன.
அமெரிக்காவின் மேலும் 25 மாநிலங்களில் இதேபோன்ற சட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.
கல்வி நிறுவனங்களில் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடுக்கும் 'டைட்டில் IX' (Title IX) என்ற கூட்டாட்சிச் சட்டத்தை இந்த மாநிலத் தடைகள் மீறவில்லை என்று உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகளும் ஒருமனதாகத் தீர்ப்பளித்துள்ளனர். பங்கேற்க தடை இருப்பினும், அரசியலமைப்பின் 14ஆவது திருத்தமான 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்ற உரிமையை இந்தச் சட்டங்கள் மீறுகிறதா என்ற கேள்வியில் நீதிபதிகள் தங்களின் சித்தாந்த அடிப்படையில் பிரிந்து வாக்களித்தனர்.
நீதிமன்றத்தில் உள்ள 6 பழமைவாத நீதிபதிகள் இந்தத் தடைச் சட்டங்களுக்கு ஆதரவாகவும், 3 தாராளவாத நீதிபதிகள் எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.
பெரும்பான்மை நீதிபதிகளின் ஆதரவோடு எழுதப்பட்ட இந்தத் தீர்ப்பில், "மாநிலங்கள் தங்களின் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை உயிரியல் ரீதியான பெண்களுக்கு மட்டுமே எனத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு பெண்களுக்கான விளையாட்டுகளை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் அரசியலமைப்பிற்கோ அல்லது டைட்டில் IX சட்டத்திற்கோ இல்லை" என்று நீதிபதி பிரெட் கவனா குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் இந்தத் தடைச் சட்டங்களுக்குத் தனது முழு ஆதரவை வழங்கியிருந்தது.
இந்தத் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்ட ட்ரம்ப், இது பெண்களுக்கு எதிரான விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் பங்கேற்பதைத் தடுக்கும் ஒரு "பெரிய வெற்றி" என்று பாராட்டியுள்ளார்.
போட்டித்தன்மையில் நியாயத்தன்மையும் பாதுகாப்பும் இருக்கவே இந்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டதாக மாநில அரசுகள் வாதிட்ட நிலையில், இது திருநங்கைகளின் உரிமைகளைப் பறிக்கும் ஒரு செயல் என்று மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

