தாய்லாந்தின் பட்டாயா பகுதியில் போதை மற்றும் வாக்குவாதம் காரணமாக, இங்கிலாந்தைச் சேர்ந்த 34 வயதைக் கொண்ட தொழிலதிபர் தோமஸ் டேவிட் போல் என்பவரை 21வயதுடைய அவரது காதலி இசபெல் வைலட் கரிரஸ் என்பவரால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள், சி…

தாய்லாந்தின் பட்டாயா பகுதியில் போதை மற்றும் வாக்குவாதம் காரணமாக, இங்கிலாந்தைச் சேர்ந்த 34 வயதைக் கொண்ட தொழிலதிபர் தோமஸ் டேவிட் போல் என்பவரை 21வயதுடைய அவரது காதலி இசபெல் வைலட் கரிரஸ் என்பவரால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள், சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்து வந்து வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். பிரேத பரிசோதனை

கடந்த புதன்கிழமை நகைக்கடை ஒன்றில் திருமண மோதிரம் வாங்குவது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் வீட்டிற்கு வந்து உயர் ரக போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளனர்.

போதையின் உச்சத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், இசபெல் கத்தியால் தோமஸ்ஸை சரமாரியாகக் குத்தியுள்ள நிலையில் தோமஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, போதையில் இருந்த இசபெல் சடலத்தின் அருகிலேயே உறங்கியுள்ளார்.

மறுநாள் காலை வீட்டிற்கு வந்த இசபெல்லின் தோழி, தோமஸ் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அவரின், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதோடு, இசபெல்லைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.