டிக்-டாக் செயலி மூலம் நட்பாகப் பழகிய 14 வயது சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 17 வயது இளைஞர் ஒருவரை, களுத்துறை வடக்கு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமியையும் சந்தேகநபருடன் சேர்த்து காவல்துறை அதிகாரிகள் மீட்டனர். காவல்துறையினரின் விசாரணையில் தெ…
டிக்-டாக் செயலி மூலம் நட்பாகப் பழகிய 14 வயது சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 17 வயது இளைஞர் ஒருவரை, களுத்துறை வடக்கு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமியையும் சந்தேகநபருடன் சேர்த்து காவல்துறை அதிகாரிகள் மீட்டனர்.
காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ள தகவல்கள் வருமாறு:
மறவில பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி, டிக்-டாக் மூலம் 17 வயது சந்தேகநபருடன் அறிமுகமாகி, அவரிடம் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். சந்தேகநபர் அந்தச் சிறுமியை நேரில் சந்திக்கச் சென்று, சில நாட்கள் அவருடன் தங்கியிருந்தபோது, சிறுமியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார். பின்னர், புத்தளத்தில் உள்ள சிறுமியின் சகோதரியின் வீட்டில் வைத்து, இரண்டாவது முறையாகவும் அவரைத் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
சம்பவம் குறித்துக் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடமேல் மாகாண பிரதி காவல்துறை மா அதிபர் (DIG) அஜித் ரோஹணவின் ஆலோசனையின் பேரில், பொலிஸ் அத்தியட்சகர்கள் (SP) ரோஹண பெரேரா மற்றும் தம்மிக ஹப்புகொட ஆகியோர் தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

