லெபனானில் இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள சுமார் 600 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து நிலைகொள்ளலாம் என்பதற்கான அனுமதியை இஸ்ரேலுக்கு வழங்குகின்றதாக லெபனானும் இஸ்ரேலும் ஒரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்களின் ஆயுதங்கள் 100 வீதம…

லெபனானில் இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள சுமார் 600 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து நிலைகொள்ளலாம் என்பதற்கான அனுமதியை இஸ்ரேலுக்கு வழங்குகின்றதாக லெபனானும் இஸ்ரேலும் ஒரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்களின் ஆயுதங்கள் 100 வீதம் களையப்படும் வரை இஸ்ரேலிய படைகள் லெபனானில் நிலைகொள்வதற்கான அனுமதி அந்த ஒப்பந்தத்தின் ஊடாக இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதலாவது நிபந்தனையே, லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான்.

அத்துடன், இஸ்ரேலிய படைகள் லெபனானில் நிலைகொண்டுள்ள இடங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இஸ்ரேல் அதற்கு உடன்படவில்லை.

லெபனானில் ஹிஸ்புல்லாக்களின் நிலைகள் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வந்த தாக்குதல்களை நிறுத்தவில்லை. இன்றுவரை அந்த தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

லெபனானில் தனது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று ட்ரம்ப் இஸ்ரேலுக்கு கடுமையான அழுத்தம் கொடுத்து வந்தார். அது வெறும் அரசியல் அழுத்தமல்ல நேரடியான மிரட்டலுடனான அழுத்தமாகவே இருந்தது.

அமெரிக்காவின் ஆதரவு இல்லையென்றால் இஸ்ரேல் என்ற நாடே இருக்காது என்ற வகையில் அவர் கருத்துகளை வெளியிட்டிருந்தார். மேலும், வெனிசுவேலா, கிரீன்லாந்து, கனடா, இந்தியா மற்றும் நேட்டோ நாடுகளிடம் பேசிய அதே பாணியில், இஸ்ரேலின் இறையாண்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் சில கருத்துகளை முன்வைத்தார்.

ட்ரம்பின் அந்தக் கருத்துகளுக்கு இஸ்ரேல் தரப்பிலிருந்து வழங்கப்பட்ட பதில்தான் பின்னர் பெரும் கவனத்தை ஈர்த்தது.இந்தவிடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...