இந்தோனேசியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கொஜேக் அமைப்பின் இணை நிறுவனரும் அந்த நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சருமான நாடிம் மகாரிமிற்கு ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஜகார்த்தா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாடசாலைகளுக்கு மடிக்கண…
இந்தோனேசியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கொஜேக் அமைப்பின் இணை நிறுவனரும் அந்த நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சருமான நாடிம் மகாரிமிற்கு ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஜகார்த்தா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாடசாலைகளுக்கு மடிக்கணினிகள் கொள்முதல் செய்த திட்டத்தில், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அரசுக்கு சுமார் 120 மில்லியன் டொலர் இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.தொழில்நுட்ப வளர்ச்சி
இந்தோனேசியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடையாளமாகவும், இளம் பில்லியனராகவும் அறியப்பட்ட நாடிம் மகாரிமிற்கு இந்தத் தீர்ப்பு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று நாடிம் மகாரிம் தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இன்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்த ஊழல் வழக்கில் நாடிம் மகாரிமிற்கு சிறைத்தண்டனையுடன் சேர்த்து பெரும் தொகையை அபராதமாகவும், நஷ்டஈடாகவும் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

