உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கண்டறிவதற்காகவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தற்போதைய அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டிருப்பதாக பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் நீக்கம் குறித்த கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் வகையில் மேற்கண்ட…
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கண்டறிவதற்காகவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தற்போதைய அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டிருப்பதாக பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் நீக்கம் குறித்த கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் வகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம்
குறித்த பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் வாக்குறுதியை வழங்கியே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
தற்போதும் அந்த நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கின்றது. விரைவில் குறித்த சட்டத்தை நீக்குவதற்கு நீதி அமைச்சு உள்ளிட்ட துறைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
பயங்கரவாத தடைச் சட்டத்தை ஜனநாயகத்தை மீறும் வகையில் அரசாங்கம் செயற்படாது
எனினும் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், பல உயிர் பலிகளையும் ஏற்படுத்திய மிலேச்சத்தனமான பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியையும் அதன் பின்னணியையும் கண்டறிவதற்காகவே தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தியுள்ளது.இந்த தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களை கைது செய்வதற்காக தற்போது நடைமுறையில் உள்ள இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த வேண்டிய தேவையுள்ளது. அது ஒரு குற்றமா என கேள்வி எழுப்புகிறோம்.
அதே நேரம் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தையும், பொது அவசர கால நிலையினையும், நாட்டின் ஜனநாயகத்தை மீறுவதற்காக அரசாங்கம் ஒருபோதும் பயன்படுத்தாது.
அத்துடன் விரைவில் குறித்த சட்டங்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

