காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக கற்பிட்டி வரையிலும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளுக்கு, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த கடலோரப் பகுதிகளில், மணிக்கு 55-65…
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக கற்பிட்டி வரையிலும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளுக்கு, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த கடலோரப் பகுதிகளில், மணிக்கு 55-65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், அவ்வப்போது கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும். எதிர்கால முன்னறிவிப்புகள்
சிலாபத்திலிருந்து பொத்துவில் வரை, கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை வழியாக உள்ள கடலோரப் பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0 – 2.5 மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.இதனால் கடற்படை மற்றும் கடற்தொழிலாளர்கள், இது தொடர்பாக வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகளை கவனத்துடன் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

