இணையவழி ஊடாக மேற்கொள்ளப்படும் கையடக்கத் தொலைபேசி விற்பனை மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.பணம் வைப்பிலிடுவதை தவிர்க்கவும் விற்பனைக்குரிய பொருள் உங்களது கைகளுக்குக் கிடைக்கும்…

இணையவழி ஊடாக மேற்கொள்ளப்படும் கையடக்கத் தொலைபேசி விற்பனை மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.பணம் வைப்பிலிடுவதை தவிர்க்கவும்

விற்பனைக்குரிய பொருள் உங்களது கைகளுக்குக் கிடைக்கும் வரை, அறிமுகமில்லாத நபர்களின் வங்கி கணக்குகளுக்கு பணத்தை வைப்பிலிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர். தங்களது பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது தத்தமது பொறுப்பாகும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இவ்வாறான மோசடிக்காரர்களிடம் சிக்கி ஏமாறாமல் இருப்பதற்கு, பொருள் கிடைத்த பின் பணத்தைச் செலுத்தும் முறையை மாத்திரம் பயன்படுத்துமாறு மேலும் அறிவுறுத்தியுள்ளது.