வடக்கு கடலை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணை வேண்டும் என வட மாகாண கடற்றொழில் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூர் இழுவை மடி தொழிலால் நிலமட்டத்திலிருந்து கீழாக ஒரு அடி ஆழத்தில் தோண்டப்படுகிறது. இதனால் மீன்வசிப்பிடங்கள் உற்பத்தியிடங்கள் எ…

வடக்கு கடலை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணை வேண்டும் என வட மாகாண கடற்றொழில் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூர் இழுவை மடி தொழிலால் நிலமட்டத்திலிருந்து கீழாக ஒரு அடி ஆழத்தில் தோண்டப்படுகிறது. இதனால் மீன்வசிப்பிடங்கள் உற்பத்தியிடங்கள் என்பன முற்று முழுதாக இல்லாமல் போகின்றன. இதனால் தற்போது கடற்றொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக பெரிதும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.உரிய நடவடிக்கை மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் உட்பட மீனவ அமைப்புகளின் பிரதிநிதி அனைவரும் உள்ளூர் ரோலர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத கடற்றொழில் தொடர்பாக எவரும் வாய் திறப்பது இல்லை.திட்டமிட்ட முறையிலே எமது கடல் வளங்கள் முற்று முழுதாக அழிக்கப்படுகின்றது. இதனை தடுப்பதற்காக சுமந்திரன் உட்பட அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.சட்டவிரோதமான தொழில்கள் ஊக்குவிக்கப்பட்டமையினால் தான் கடலில் மீன் பிடி முற்று முழுதாக இல்லாமல் போய் உள்ளது.கோரிக்கை வடமராட்சி கிழக்கில் அதிகளவான சுருக்கு வலை தொழில்கள் இடம்பெற்று வருவதாகவும், ஒரு சிலரை தவிர வேறு எவரையும் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வது இல்லை.எமது கடலை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், சட்டவிரோத தொழிலில் ஈடுபவர்களை கட்டுப்படுத்துவதற்கு உரிய தரப்புகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.