வவுனியா மாநகர சபையின் காணாமல் போன செங்கோல் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.யே.எஸ். ரத்னமலலா தெரிவித்துள்ளார். மாநகர சபையின் செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை காணாமல் போனதாக சபை செயலாளர் அள…

வவுனியா மாநகர சபையின் காணாமல் போன செங்கோல் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.யே.எஸ். ரத்னமலலா தெரிவித்துள்ளார்.

மாநகர சபையின் செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை காணாமல் போனதாக சபை செயலாளர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வவுனியா ஓயார் சின்னக்குளம் பகுதியில் இருந்து செங்கோல் மீட்கப்பட்டது.

முன்னாள் மேயரின் அறிவுறுத்தலின் பேரில் அவரது நண்பர் ஒருவர் செங்கோலை அங்கு கொண்டு வந்து ஒப்படைத்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட செங்கோல் வவுனியா நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னாள் மேயர், பெண் ஒருவர் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்ய நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சொகுசு வாகனத்தையும் பொலிஸார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.