இலங்கையின் பல்வேறு பிரதேச நீதிமன்றங்களில் வழக்குப் பொருட்களாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள், அவற்றுடன் தொடர்புடைய வழக்குகளின் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் எரித்து அழிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் போதைப்பொருள் பிரிவால் கைப்பற்றப்பட்டு, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில…

இலங்கையின் பல்வேறு பிரதேச நீதிமன்றங்களில் வழக்குப் பொருட்களாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள், அவற்றுடன் தொடர்புடைய வழக்குகளின் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் எரித்து அழிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் போதைப்பொருள் பிரிவால் கைப்பற்றப்பட்டு, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக நிலுவையில் இருந்த போதைப்பொருட்களின் இருப்பும், ரசாயன பரிசோதகர் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்ததும், நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களால் அழிக்க உத்தரவிடப்பட்டதுமான போதைப்பொருட்களின் இருப்பும், மேற்கண்டவாறு எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை கடந்த சனிக்கிழமை (27) காலை புத்தளம், வனாத்தவில்லு, பிரதேசத்தில் அமைந்துள்ள லக்டோவத்த பகுதியில் நிறுவப்பட்டிருந்த தகனமேடையில் வைத்து எரித்து அழிக்கப்பட்டுள்ளது.

எரிக்கப்பட்ட போதைப்பொருட்களின் இருப்பு பின்வருமாறு.ஐஸ் 14 கிலோ 97 கிராம் குஷ் 39 கிலோ 710 கிராம் ஹெரோயின் 01 கிலோ 02 கிராம் கஞ்சா மற்றும் ஹஷிஷ் 04 கிலோ 139 கிராம் மெண்டி போதைப் பொருள் 01 கிலோ 200 கிராம் கொக்கைன் 02 கிலோ 30 கிராம் போதை மாத்திரைகள் 26,262 என்பனவே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு மேலதிக நீதவான், அரசாங்கப் இரசாயனப் பரிசோதகர் அலுவலகத்தின் சிரேஷ்டப் பகுப்பாய்வாளர், தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் உதவி பணிப்பாளர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உதவி பணிப்பாளர் ஆகியோர் இதன்போது சமூகமளித்து, போதைப்பொருட்கள் எரிக்கப்பட்டு அழிக்கப்படுவதை கண்காணித்துள்ளனர்.