பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று(01.07.2026) காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஆண்ட்வெர்ப் நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள லிங்கெரூவர் குடியிருப்புப் பகுத…
பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று(01.07.2026) காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆண்ட்வெர்ப் நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள லிங்கெரூவர் குடியிருப்புப் பகுதியில் உள்ள 10 மாடி கட்டிடத்தின் 8ஆவது மாடியில் உள்ளூர் நேரப்படி நேற்று(01) காலை 9:53 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.திடீர் தீப்பரவல் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களைக் கொண்ட இந்த பிரம்மாண்ட கட்டிடத்தில் தீ மளமளவென பரவியதை அடுத்து, ஏராளமான தீயணைப்பு வாகனங்களும் அவசர மருத்துவக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டிடத்திற்குள் கரும்புகை சூழ்ந்துள்ளதாலும், தீயின் தீவிரம் அதிகமாக இருப்பதாலும் தீயைக் கட்டுப்படுத்துவதில் தீயணைப்பு வீரர்களுக்கு கடும் சவாலான சூழல் நிலவி வருகிறது.தீயில் சிக்கிய சிலர் தப்பிக்க வழியின்றி பால்கனிகளில் தொங்கியபடி தவித்த பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்த கோர விபத்து குறித்து பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாதிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட குடியிருப்பு மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மேலும், ஆபத்தான சூழலிலும் உயிர்களைக் காக்க கடுமையாகப் போராடி வரும் மீட்புப் படையினருக்குத் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

