சவூதி அரேபியாவில் உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு எரிசக்தி அமைச்சின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சவூதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்றே இவ்வாறு இன்று (28.6.2026) விபத்துக்குள்ளாகியுள்ள…

சவூதி அரேபியாவில் உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு எரிசக்தி அமைச்சின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவூதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்றே இவ்வாறு இன்று (28.6.2026) விபத்துக்குள்ளாகியுள்ளது.ராஸ் தனுரா பகுதியில் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 14 பேரும் உயிரிழந்துள்ளதாக அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.விபத்து

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அந்த செய்தி நிறுவனம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமது இரங்கலையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.இதற்கிடையில், கிழக்கு பிரான்சின் டாம்ப்லைன் நகரில் பாராசூட் வீரர்களை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.உயிரிழந்தவர்களில் விமானி மற்றும் ஐந்து மாணவர்கள், ஐந்து பயிற்றுனர்கள் உட்பட 10 பயணிகள் அடங்குவதாக குறி்பிடப்படுகின்றது. பாராசூட் பயிற்சிப் பாடசாலை ஒன்றால் பயன்படுத்தப்பட்ட அந்த விமானம், நான்சி-எஸ்ஸே விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வணிக வளாகம் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்திற்கு அருகிலுள்ள, மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது.