முக்கிய வழக்குகளின் சாட்சிகள் வெளிநாடுகளில் வதியும் பட்சத்தில் அந்தந்த நாடுகளுக்கே சென்று சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறுவதற்கான நடவடிக்கையொன்று மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. புதிய வழிமுறை சில குற்ற வழக்குகளில் சாட்சியமளிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து சாட்சியமளிக்க எதி…

முக்கிய வழக்குகளின் சாட்சிகள் வெளிநாடுகளில் வதியும் பட்சத்தில் அந்தந்த நாடுகளுக்கே சென்று சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறுவதற்கான நடவடிக்கையொன்று மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. புதிய வழிமுறை சில குற்ற வழக்குகளில் சாட்சியமளிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து சாட்சியமளிக்க எதிர்பார்க்கப்படும் சாட்சிகள் இந்த நாட்டிற்கு வர அச்சம் கொண்டுள்ளதன் காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியைக் கருத்தில் கொண்டு, வெளிநாட்டு சாட்சிகளுக்காக அந்நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு அதிகாரிகள் சென்று சாட்சியங்களைப் பெறுவதற்கு ஒரு முறையான அமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

இந்த புதிய வழிமுறையை விரைவில் நடைமுறை ரீதியாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், அதன்பிரகாரம் வெளிநாட்டு சாட்சிகளிடமிருந்து சாட்சியங்களைப் பெறுவதற்காக அதிகாரிகள் குழு ஒன்று விரைவில் ஆஸ்திரேலியாவிற்குப் புறப்படவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.