வெல்லவாய–தனமல்வில பிரதான வீதியில், ஊவா குடா ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலுல்ல விஹாரஸ்தானத்திற்கு அருகில் இன்று (03) காலை இரண்டு லொறிகள் மோதிய விபத்தில் சாரதி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியின் பின்புறத்தில், மணல் ஏற்றிச் சென்ற…

வெல்லவாய–தனமல்வில பிரதான வீதியில், ஊவா குடா ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலுல்ல விஹாரஸ்தானத்திற்கு அருகில் இன்று (03) காலை இரண்டு லொறிகள் மோதிய விபத்தில் சாரதி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியின் பின்புறத்தில், மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் டிப்பர் லொறியின் சாரதி பலத்த காயமடைந்த நிலையில், முதலில் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊவா குடா ஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.