நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருள்கள் சென்றடைந்துள்ளன என இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். ‘ஒபரேஷன் அமிஸ்டாட்’ என்ற பெயரில் இந்திய விமானப் படையின் இரண்டு சி-17 விமானங்களில் மருந்துகள், மரு…
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருள்கள் சென்றடைந்துள்ளன என இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
‘ஒபரேஷன் அமிஸ்டாட்’ என்ற பெயரில் இந்திய விமானப் படையின் இரண்டு சி-17 விமானங்களில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்பட 35 தொன் நிவாரணப் பொருள்கள் மற்றும் 41 போ் கொண்ட மீட்புக் குழுவினா் கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டனா்.
இதுகுறித்து ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,
இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருள்கள் வெனிசுலாவைச் சென்றடைந்தன. தற்காலிக மருத்துவ முகாம்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அங்கு மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளுக்கு மேலும் வலுசோ்க்கும் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டாா்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,430 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நிலநடுக்கத்தைத் தொடா்ந்து, நாடு முழுவதும் 68,900 பேரை காணவில்லை என உறவினா்கள் புகாரளித்துள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்தது. (a)

