வெனிசுவேலாவின் கடலோரப் பகுதியை உலுக்கிய 7.2 மற்றும் 7.5 மெக்னிடியூட் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்பட்டு 10 நாட்கள் கடந்துள்ள நிலையில், நாட்டின் அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை 2,954 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் 16,000க்கும் மேற்பட்ட மக்கள் வீடுக…
வெனிசுவேலாவின் கடலோரப் பகுதியை உலுக்கிய 7.2 மற்றும் 7.5 மெக்னிடியூட் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்பட்டு 10 நாட்கள் கடந்துள்ள நிலையில், நாட்டின் அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை 2,954 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மேலும் 16,000க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து தவித்து வரும் நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமற்ற கணக்கீடுகளின்படி 41,000 ஐ தாண்டியுள்ளது.இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட லா குவைரா (La Guaira) பகுதியில், ஐந்தாவது மாடி குடியிருப்பில் வசித்து வந்த ஜுவான் ஜபட்டா என்ற நபர் இரண்டு நாட்கள் மற்றும் ஏழு மணி நேரம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்து, பின்னர் தன்னார்வலர்களால் மீட்கப்பட்டுள்ளார்.'
அவர் தற்போது அமெரிக்க அரசு மற்றும் சமாரியன்ஸ் பர்ஸ் (Samaritan's Purse) தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தி வரும் தற்காலிக கள மருத்துவமனையில் விலா எலும்பு முறிவுகளுக்காகச் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், தங்களது அரசு மீட்புப் பணிகளை விரைவாகச் செய்ததாகக் கூறி, அரசு மீதான விமர்சனங்களை வன்மையாக மறுத்துள்ளார்.இராணுவ மற்றும் அரசு அதிகாரிகளின் இருப்பு
எனினும், பாதிக்கப்பட்ட மக்களும் சர்வதேச உதவி அமைப்புகளும் அரசின் இந்த வாதத்தை முற்றாக நிராகரித்துள்ளனர்.உணவு, மருந்துகள் மற்றும் இடிபாடுகளை அகற்றுவதற்கான கனரக இயந்திரங்கள் வந்து சேரப் பல நாட்கள் தாமதமானதே இவ்வளவு பெரிய பாதிப்பிற்கு முக்கியக் காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நிலநடுக்கம் நடந்து பல நாட்கள் கடந்தும் இன்னும் முறையான இராணுவ மற்றும் அரசு அதிகாரிகளின் இருப்பு களத்தில் குறைவாகவே உள்ளதாகவும், மாறாகத் துப்பாக்கிகளுடன் உலா வரும் பொலிஸார் தங்களுக்கு உதவிகரமாக இல்லை என்றும், தங்களுக்குப் பொதுமக்களும் தன்னார்வலர்களும் மட்டுமே உதவி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

