வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,719 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு வெனிசுலாவின் லா குவைரா மாகாணத்தை தாக்கிய இரண்டு வலுவான நிலநடுக்கங்களே இந்த பேரழிவுக்கு காரணமாகியுள்ளன. இந்த அனர்த்தத்தில் இதுவரை 5,0…

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,719 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடக்கு வெனிசுலாவின் லா குவைரா மாகாணத்தை தாக்கிய இரண்டு வலுவான நிலநடுக்கங்களே இந்த பேரழிவுக்கு காரணமாகியுள்ளன.

இந்த அனர்த்தத்தில் இதுவரை 5,034 பேர் காயமடைந்துள்ளதுடன், பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆக பதிவான இந்த இரண்டு பிரதான நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, இதுவரை 600-க்கும் மேற்பட்ட பிந்தைய அதிர்வுகள் பதிவாகியுள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.