வெனிசுவேலாவில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தத் துயரச் சம்பவத்தில் சிக்கி, இதுவரை 1,450 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 68,900 பேர் வரை காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த…
வெனிசுவேலாவில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தத் துயரச் சம்பவத்தில் சிக்கி, இதுவரை 1,450 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 68,900 பேர் வரை காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தில், வெனிசுவேலாவின் ‘கிளப் ஸ்போர்ட் மரிடிமோ டி லா குவைரா’ (Club Sport Marítimo de La Guaira) கால்பந்து கிளப்பில் விளையாடும் அர்ஜென்டினா வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் குடும்பத்தினர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி யானினா மரணெல்லா மற்றும் அவர்களது பிள்ளைகளான ஆரோன் மற்றும் ஐன்ஹோவா ஆகியோர் நிலநடுக்கத்தில் சிக்கி காணாமல் போயிருந்தனர். அவர்களைக் கண்டறிய கடந்த 74 மணிநேரமாகத் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இறுதியில் மூவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்தத் துயரச் செய்தியை ட்ரெஜோவின் நண்பரும் கால்பந்து வீரருமான எட்சன் டோர்டோலெரோ சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இக்கட்டான இந்தத் துயர நேரத்தில், ட்ரெஜோவின் குடும்பத்தினருக்குத் தேவையான மரியாதையையும் ஆதரவையும் வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

